கட்டிடத்தை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்தல் DEDICATION OF BUILDING, TO THE LORD (சபை பிரதிஷ்டை) 59-0708M புதன்கிழமை காலை, ஜூலை 8, 1959 விசுவாச சபை, கிளீவ்லாந்து, டென்னசி, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 59-0708M - கட்டிடத்தை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்தல் நன்றி. மிக்க நன்றி, சகோதரன் லிட்டில்ஃபீல்ட் அவர்களே. 2 நான் சில நிமிடங்களுக்கு முன்பு உள்ளே வந்துகொண்டிருந்தபோது, சாம் ஜோன்ஸ் தான் சுவிசேஷகர் என்று என் மகன் பில்லி என்னிடம் சொன்னான் என்று நினைக்கிறேன். அது சரியா? [ஒரு சகோதரன், "சாம் ஜோன்ஸ் கோல்வெதர். சாம் ஜோன்ஸ் என்பது நிலைத்துவிட்டது" என்று சொல்கிறார்] இங்கே வசித்தவர். ஆகவே, இந்த இடம் ஒருவேளை ஒரு புனிதமான இடமாக, கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடமாக இருக்க வேண்டும். மேலும், இந்தப் பரிசுத்தமான இடத்தின் மேல் நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டியுள்ளோம். இந்த கட்டிடத் தைப் பாதுகாத்து, இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் நிறைவேறப்பண்ணின தேவனுக்கு இதை அர்ப்பணிப்பதற்காக (பிரதிஷ் டை பண்ணுவதற்காக) இன்று காலை நாம் இங்கே கூடியிருக்கிறோம். 3 கர்த்தருடைய சேவைக்காக ஒரு ஆலயத்தை அர்ப்பணிக்கும்போது, அதைக் குறித்துச் சில வார்த்தைகளைப் பேசுவது எனக்கு எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியையும், சிலாக்கியத்தையும் தருகிறது. சபை என்பது ஒரு கட்டிடம் மட்டுமே; ஆனால் ஸ்தேவான் ஒருமுறை சொல்லும்போது, "சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். எனினும் உன்னதமானவர் கைகளினால் செய்யப் பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். ஆனால் எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினீர்" என்று சொன்னான். பார்த்தீர்களா? 4 மக்களில் இருக்கும் தேவனுடைய ஆவியானவரே சபையை உருவாக்குகிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தச் சபை சரீரமானது ஒன்றாகக் கூடி தேவனைத் தொழுதுகொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கூடுகை இடங்களும் நமக்கு இருக்கின்றன. தேவன் நம்முடைய அருமையான சகோதர னுக்கும், இந்தச் சபையாருக்கும் இந்த மிக அழகான கட்டிடத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகையால், நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளும் இடமாக இதை அர்ப்பணிக்கும் நோக்கத்திற்காகவே இன்று காலை நாம் இங்கே இருக்கிறோம். 5 அர்ப்பணிப்பு ஆராதனைக்கு முன்பாக, இந்த அர்ப்பணிப்பில் பங்குபெறும் விதமாக, வேதாகமத்திலிருந்து நாளாகமம் இரண்டாம் புஸ்தகம் 5-ம் அதிகாரத்தை வாசிக்கும்படி இந்த போதகரைக் கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் நாளாகமம் 5. சகோதரன் லிட்டில்ஃபீல்ட், நன்றி. [சகோதரன் லிட்டில்ஃபீல்ட் வேதப்பகுதியை வாசிக்கிறார்] [சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலையெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் பண்ணினவைகளையும், வெள்ளியையும், பொன் னையும், சகல பணிமுட்டுகளையும் உள்ளே கொண்டுவந்து, தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.] [அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோனாகிய தாவீது நகரத்திலிருந்து கொண்டுவரும்படி, சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமில் கூட்டினான்.] [அப்படியே இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.] [இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு, லேவியர் பெட்டியை எடுத்துக்கொண்டு,] [பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலுள்ள பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; இவைகளை ஆசாரியரும் லேவியரும் கொண்டுவந்தார்கள்.] [ராஜாவாகிய சாலொமோனும், அவனிடத்தில் கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக, எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்குக்கு எட்டாததுமான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.] [ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டை களுக்குக் கீழே, அதின் ஸ்தானத்திலே கொண்டுவந்து வைத்தார்கள்.] [கேருபீன்கள் பெட்டி இருக்கும் ஸ்தானத்தின்மேல் தங்கள் இரண்டு செட்டை களையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.] [பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதிக்கு முன்னான பெட்டியிலிருந்து காணப்படத் தக்கதாய், அவர்கள் அந்தத் தண்டுகளை இழுத்துவைத்தார்கள்; வெளியிலே அவை காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.] [இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் அவர்களோடே ஓரேபிலே உடன்படிக்கை பண்ணுகையில், மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு பலகைகளே ஒழிய, அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.] [ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், அங்கே இருந்த ஆசாரியர் எல்லாரும் முறைபார்த்திராமல், தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.] [ஆசாப், ஏமான், எதுத்தூன் என்னும் பாடகரான லேவியர் அனைவரும், அவர்கள் குமாரரும், அவர்கள் சகோதரரும், மெல்லிய புடைவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும், தம்புருகளையும், சுரமண்டலங்களையும் பிடித்து, பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடே பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.] [பூரிகைகளை ஊதுகிறவர்களும், பாடுகிறவர் களும், ஒருமிக்கக் கர்த்தரைத் துதித்து ஸ்தோத் திரிக்கிறதற்கு ஏகசத்தமாய்த் தொனிக்கப் பண்ணினபோது, பூரிகைகள், கைத்தாளங்கள் முதலான கீதவாத்தியங்கள் முழங்குகிறபோதும்: கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளதென்று அவரைத் துதித்துப்பாடுகிறபோதும், கர்த்தருடைய ஆலயமாகிய அந்த வீடானது மேகத்தினால் நிரப்பப்பட்டது.] [அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாதிருந்தது; கர்த்த ருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.] அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்... நான் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினேன் என்றும் சொன்னான்... 6 நாம் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை பயபக்தியுடன் நோக்கிப் பார்க்கும் போது, "கர்த்தருக்குக் கட்டிட அர்ப்பணிப்பு" என்ற இந்தத் தலைப்பில் பேசுகையில், நான் இந்தக் கூற்றைச் சொல்ல விரும்புகிறேன்: தேவன் சர்வவியாபியாக (எங்கும் நிறைந்தி ருக்கிறவர்) இருக்கிறார் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக வேத பண்டிதர்களுக்குத் தெரிந்ததே. 7 சரி, ஒரு குறிப்பிட்ட அளவில் தேவன் சர்வவியாபியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். தேவன் சர்வவியாபி, அவர் சர்வஞானியாக (எல்லாம் அறிந்தவராக) இருப்பதே அவரை சர்வவியாபியாக மாற்றுகிறது. தேவன் வளிமண்டலத்தைப் போலவே சர்வவியாபியாக இருப்பாரானால், அவர் ஒரு கட்டுக்கதை ஆகிவிடுவார்; ஆனால் தேவன் ஒரு நபர், எனவே அவர் தங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் இருக்க வேண்டும். அவர் சர்வஞானியாக இருப்பதினால் சர்வ வியாபியாக இருக்கிறார்; எனவே அவர் எங்கும் இருக்கிறார் என்றால், அவர் சர்வஞானியாக இருப்பதினால் எல்லாவற்றையும் அறிகிறார்; ஆகவே அவர் எல்லாவற்றையும் அறிந்திருப் பதினால், ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்கிறது என்பதையும் அவர் அறிவார். ஆனால் தேவன் தாமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறார். 8 ஆகையால் அவர் எல்லையற்றவராக (Infinite) இருக்கிறார்... இப்போது, "எல்லை யற்றவர்" என்ற வார்த்தையை எந்த மொழி யிலும் எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எல்லையற்றவர் என்ற வார்த்தை யானது "முடிவில்லாதவைகள்" என்பது போன்றது, அது அங்கிருந்து தொடர்ந்து செல்கிறது. தேவன் எல்லையற்றவர். எல்லை யற்றவர் என்பதற்கு நான் ஒரு மேற்கோளைக் கொடுக்க முயன்றால், அது இப்படியாக இருக்கும்: உலகம் உருவாக்கப் படுவதற்கு நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, பூமியில் இருக்கப்போகும் ஒவ்வொரு தெள்ளுப் பூச்சி யையும் அந்த எல்லையற்ற தேவன் அறிந்தி ருந்தார், மேலும் அவைகள் ஒவ்வொன்றும் எத்தனை முறை கண் சிமிட்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எல்லையற்றவர் என்பதன் அர்த்தத்தில் இது பாதியைக் கூடத் தொடவில்லை. 9 எனவே, தேவன் எல்லையற்றவராகவும் சர்வ ஞானியாகவும் இருப்பதால், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் என்ன நடக்கிறது என்பதையும் அவர் அறிவார். ஆனால் அவரே ஒரு நபர், அவர் ஓரிடத்தில் வசிக்கிறார். எனவே அவரை... நாம் அவரை சர்வஞானி என்று அழைக்கலாம். 10 தேவன் தம்முடைய மக்களின் மத்தியில் வசிக்கிறார். அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்தபோது, அவர்கள் தேவனுடைய மக்களாக இருந்தார்கள். அவர் அவர்களை ஒரு தேசமாக, ஒரு விசேஷித்த மக்களாக, ஒரு ராஜரீக ஆசாரியக் கூட்டமாகத் தெரிந்து கொண்டார். இந்த குறிப்பிட்ட மக்களை அவர் தெரிந்துகொண்டார். ஆனால் அவர்கள் எகிப்தில் வசித்து சிதறடிக்கப்பட்டிருந்த வரையில், அவர்கள் தேவனுடைய மக்களாக இருந்தார்கள்; ஆனால் அவர் அவர்களை வெளியே அழைத்தபோது, அவர்கள் தேவனுடைய சபையாக மாறினார்கள். ஏனெனில் சபை (Church) என்ற வார்த்தைக்கு, "பிரித்தெடுக்கப் பட்டவர்கள், வெளியே அழைக்கப்பட்டவர்கள்" என்று அர்த்தம். அவர்கள் தேவனுடைய சபையாக மாறினார்கள். 11 பின்பு அவர்கள் தேவனுடைய சபையாக இருப்பதால், இந்த மக்கள் கூடிவருவதற்கும், அங்கே ஐக்கியம் கொள்வதற்கும் தேவன் ஒரு குறிப்பிட்ட இட நியமித்தார்; ஏனெனில் தேவன் தம் மக்களுடனும், தம் மக்கள் மத்தியிலும் ஐக்கியம் கொள்ள வாஞ்சிக்கிறார். 12 பின்னர் தேவன் மோசேயை மின்னல்கள் வெட்டிக்கொண்டும் இடிகள் முழங்கிக் கொண்டும் இருந்த அக்கினிமயமான மலைக்கு மேலே அழைத்துச் சென்றார். பூமியில் தான் வசிப்பதற்கு எத்தகைய வாசஸ்தலத்தை அவர் விரும்பினார் என்பதை மோசேக்குக் காட்டினார்; ஏனெனில் பரலோகத்தில் தான் கண்ட கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின்படியே மோசே பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரத்தை வடிவமைத்தான். 13 ஓ, ஒரு சபைக்கட்டிடம் கட்டப் படுவதற்கு தேவன் அனுமதிக்கும் முன்பாக, அந்தக் கட்டிடம் அவருடைய பரலோக வாசஸ்தலத்தின் மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் அழகாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். மோசே எல்லாவற்றையும் பரலோகத்தின் மாதிரியின்படியே செய்தான். 14 இப்போது, மோசே எதைக் கண்டிருக்க வேண்டும் என்பதைச் சற்றுப் பார்ப்போம். முதலாவதாக அவன் அதை பூமிக்குரிய பொருட்களினால் செய்தான், அது தோல் களினால், ஆட்டுத்தோல்களினால் செய்யப் பட்டது. அதை நாம் ஒரு ஆசரிப்புக் கூடாரம் அல்லது ஒரு கூடாரம் என்று அழைக்கலாம், அதற்கு "தங்கும் இடம்" என்று அர்த்தம். மேலும் இந்த ஆசரிப்புக் கூடாரத்தில், அல்லது கூடாரத்தில், மூன்று தனித்தனி அறைகள் இருந்தன; பரலோகத்திலும் நிச்சயமாகவே அப்படித்தான் இருக்கிறது. 15 ஒன்று பிராகாரம் அல்லது சபை கூடும் இடம் என்று அழைக்கப்பட்டதை நாம் காண்கிறோம்; அடுத்தது பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது; அதற்கு அடுத்தது மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது; இவை அனைத்தும் கிறிஸ்துவைச் சுட்டிக் காட்டின. அதன் சுவர்களுக்கு உள்ளே இருந்த பணிமுட்டுகள் (Furniture) கூட, ஒவ்வொன்றும் கிறிஸ்துவைப் பேசின. 16 இதனால்தான் கிறிஸ்துவுக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் வாசமாயிருக்கிறது; ஏனெனில் எல்லாமே அவருக்கு நேராக வழிநடத்தின. கிறிஸ்து மாம்சத்தில் வெளிப் பட்ட தேவனாக, பூமியில் கூடாரமிட்ட தேவனாக இருந்தார். ஆகையால், "சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். எனினும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். ஆனால் எனக்கு ஒரு சரீரத்தை நீர் உண்டுபண்ணினீர்" என்று ஸ்தேவானால் சொல்லப்பட்டது. 17 கட்டிடத்தில் உள்ள அனைத்து பணி முட்டுகளும் கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாக இருந்தன. பலி கழுவப்பட்ட வெண்கலத் தொட்டி, அது கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட வெண்கல பலிபீடம் போன்றவை. பலிபீடத்திலுள்ள வெண்கலம் கூட நியாயத் தீர்ப்பை, தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பேசுகிறது. வெண்கலம், வனாந்தரத்தில் செய்யப்பட்ட வெண்கல சர்ப்பத்தைப் போல; வெண்கலத் தினால் செய்யப்பட்ட சர்ப்பத்தின் மீதான தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பை, கடந்துபோன நியாயத்தீர்ப்பை அது பேசுகிறது. 18 எலியா மேலே சென்று பார்த்தபோது, "வானம் வெண்கலத்தைப் போல இருந்தது" என்று சொன்னார்; அது ஒரு பாவமுள்ள தேசத்தின் மீதான தெய்வீக நியாயத்தீர்ப்பாகும். வெண்கலம் நியாயத்தீர்ப்பைப் பேசுகிறது. அந்தச் சர்ப்பமும் கம்பமும் கடந்துபோன நியாயத்தீர்ப்பை, அதாவது சர்ப்பத்தின் மீதான தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பேசின; மேலும் கிறிஸ்துவின் வருகையையும் பேசின; அங்கே அவர் பாவமாக்கப்பட்டு, தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பு அவர்மேல் ஊற்றப்படும். அவர் மனிதனாகவும் தேவனாகவும் இருப்பதால், நம் அனை வருடைய பாவங்களுக்காகவும் மரிக்கும்படி, தேவதூதர்களைக் காட்டிலும் சற்றே சிறியவராகக் கீழே இறங்கி வர வேண்டியிருந்தது. 19 அவருடைய ஆத்துமா சாக முடியாது, ஏனென்றால் அவர் தேவன்; ஆனால் அவருடைய சரீரம் ஒரு பலியாக மரிக்கும் படிக்கு மாம்ச சரீரமாக மாற்றப்பட வேண்டியிருந்தது; கன்னிப் பெண்ணிடம் பிறந்த சரீரம் ஒரு பலியாக மரித்தது; இதன் மூலம் பாவிகளாகிய நாம் இதை விசுவாசிப்பதன் மூலம் தேவனிடத்தில் நெருங்கிச் சேரும்படியாக இது நடந்தது. 20 தேவன் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறார் என்பதையும், நீங்களும் அத்தகைய வீட்டில்தான் வசிக்கிறீர்கள் என்பதையும் நாம் கவனிக்கிறோம். எந்த ஒரு நபராலும் மூன்று அறைகளுக்கு மேல் வசிக்க முடியாது. 21 இருபத்தொரு அறைகள், பதினைந்து அறைகள் கொண்ட வீடுகளைப் போய்ப் பார்க்கும்போது நான் சில நேரங்களில் ஆச்சரியப் படுகிறேன். ஆனால் நீங்கள் மூன்றில் தான் வசிக்கிறீர்கள்; அதாவது சமையலறை, வரவேற்பறை மற்றும் படுக்கையறை. உங் களுக்கு மூன்று படுக்கையறைகள் இருக்கலாம், சூரிய ஒளிக்க கூடங்கள் இருக்கலாம், ஆனால் உண்மையில் மூன்றே மூன்றுதான் இருக்கின்றன (உங்களுக்கு ஒரு சாப்பாட்டு அறை இருக்கலாம், ஆனால் அது சமையலறையின் ஒரு பிரிவு மட்டுமே): சமையலறை, அங்கே நீங்கள் சாப்பிடுகிறீர்கள்; வரவேற்பறை, அங்கே நீங்கள் ஐக்கியம் கொள்கிறீர்கள்; மற்றும் படுக்கையறை, அங்கே நீங்கள் ஓய்வெடுக் கிறீர்கள். 22 இது தேவனுடைய சபையின் ஒழுங்கைப் பேசுகிறது. வார்த்தையைக் கேட்பதன் மூலமும் தேவனுடைய நன்மைகளைப் புசிப்பதன் மூலமும் நாம் சமையலறைக்குள் வருகிறோம், அதுவே நீதிமானாக்குதல் (Justification). பின்னர் நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளும் பரிசுத்தமாக்குதலுக்குள் (Sanctifi cation) வருகிறோம்; அதே வேளையில் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது. பின்னர் நாம் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறும்போது இளைப்பாறுதல் மற்றும் பாதுகாப்பான இடத் தைப் பெறுகிறோம். விசுவாசத்தினால் நீதிமா னாக்கப்படுதல், இரத்தத்தினால் பரிசுத்தமாக் கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (ஞானஸ்நானம்). 23 1 யோவான் 5:7 சொல்லுகிறது: "பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை," அவரே குமாரன், "பரிசுத்த ஆவி: இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். பூலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், ஜலம், இரத்தம், ஆவி: இம்மூவரும் ஒருமைப் பட்டிருக்கிறார்கள்." 24 குமாரன் இல்லாமல் உங்களுக்குப் பிதா இருக்க முடியாது, பிதா மற்றும் குமாரன் இருவரும் இல்லாமல் உங்களுக்குப் பரிசுத்த ஆவி இருக்க முடியாது; ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமலேயே நீதிமானாக்கப்பட முடியும், மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலேயே பரிசுத்தமாக்கப்பட முடியும். அவைகள் ஒருமைப்பட்டிருக்கின்றன, ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் ஒன்றாயிருக்கிறார்கள். நீங்கள் விசுவாசிப்பதின் மூலம் நீதிமானாக்கப்பட்டு ஒரு பிராகாரத்தில் இருக்க முடியும்; பாவ வாழ்க்கையிலிருந்து சுத்திகரிக்கப் பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு இன் னொன்றில் இருக்க முடியும். 25 இயற்கையில் எப்படியோ, ஆவிக்குரிய விதத்திலும் அப்படியே இருக்கிறது. ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, முதலில் வருவது தண்ணீர், இரண்டாவது வருவது இரத்தம், மூன்றாவது வருவது ஜீவன். இயேசு சிலுவையில் மரித்தபோது, அவருடைய சபையைச் சுத்திகரிக்கவும் அதைத் தமக்குள் கொண்டுவரவும் அவருடைய சரீரத்திலிருந்து இந்தக் கூறுகள் வெளிவந்தன. அவர்கள் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தியபோது தண்ணீர், இரத்தம், மற்றும் "உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" ஆகியவை வெளிவந்தன. 26 இப்படித்தான் ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம் பண்ணப்பட்டு இளைப்பாறுதலில் இருக்கிறோம். ஓ, உலகத்தால் என்ன செய்ய முடியும்? சபையானது அதன் அநேக உபதேசங்களோடு என்னைப் பிடிப்பதற்கு முன்பாகவே தேவன் என்னைப் பிடித்துக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். நான் ஒரு இளைப்பாறுதலின் இடத்தைக் கண்டேன். ஓ, "கிறிஸ்து இயேசு வுக்குட்பட்டவர்களாயிருந்து, ஆக்கினைத்தீர்ப்பு இல்லாதிருக்கிற" அந்த இனிய தங்கும் இடம், அந்த நித்திய இளைப்பாறுதல் காணப்படுகிறது. 27 பவுல் எபிரேயர் நிருபத்தில் ஓய்வு நாளைப் பற்றி விவரிக்கும் போது, ஓய்வு நாளில் தேவன் இளைப்பாறுதலில் பிரவேசித்த ஒரு காலம் இருந்தது என்றும், "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று தாவீதின் சங்கீதத்தில் சொல்லி, வெகு காலத்திற்குப் பின்பு ஒரு நாளைக் குறித்திருக்கிறார்" என்றும் சொன்னார். 28 ஏசாயா 28-ம் அதிகாரத்தில், "கற்பனை யின் மேல் கற்பனையும்; பிரமாணத்தின்மேல் பிரமாணமும்; இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாய்ச் சொல்லவேண்டும். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள். திக்குவாயினாலும் மறு பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே இளைப்பாறுதல்" என்று அவர் சொன்னார். 29 ஓ, சபையிலிருந்து பலிபீடத்திற்கும், பலிபீடத்திலிருந்து கிறிஸ்துவின் மார்புக்கும், படுக்கைக்கும், இரவுக்கும், மறைவான இடத்திற்கும், இளைப்பாறுதலின் இடத்திற்கும் வருவது அந்தப் பூரண இளைப்பாறுதலாகும். நீதிமானாக்குதலை மார்ட்டின் லூதர் போதித் தார்; பரிசுத்தமாக்குதலை ஜான் வெஸ்லி போதித்தார்; இப்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை, பெந்தெகொஸ்தே பரிசுத்த ஆவியானவரால் போதித்தது. ஒரு நித்தியமான, என்றும் அழியாத இளைப்பாறுதலுக்குள் பிரவேசியுங்கள். 30 நீங்கள் அந்த அறைக்குள் இருக்கும் வரை, நீங்கள் தேவனுடன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் மறைந்திருக்கிறீர்கள்; மேலும் நீங்கள் முதற்பேரானவர்களின் சபையில் இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையாகி இருக்கிறீர்கள்; ஏனென்றால் நீங்கள் இரத்தத்தின் வழியாகக் கடந்து வந்திருக்கிறீர்கள், "நான் இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து போவேன்." கிறிஸ்து உங்கள் நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டார், நீங்கள் ஒருபோதும் நியாயத் தீர்ப்புக்குச் செல்ல வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறீர்கள். எனவே, தேவனுடைய உண்மையான தங்கும் இடத்திற்குள் நுழைவது ஆவிக்குரிய ஞானஸ்நானத்தினால் உண்டாகிறது. 31 அது என்ன? சபையார், பாவி உள்ளே வந்து கேட்கிறான், அங்கேதான் அவன் புசிக்கிறான்; தான் ஒரு குற்றமுள்ள பாவி என்றும், மரணத்திற்கு ஏதுவானவன் என்றும், மரணத்திற்குப் பாத்திரமானவன் என்றும், ஆனால் இயேசு தனக்குப் பதிலாக மரித்தார் என்பதையும் அவன் கற்றுக்கொள்கிறான். ஆனால், "கேள்வியினாலே விசுவாசம் வரும்" என்பதை அவன் கேட்கும்போது, அவன் தன் கால்களில் எழுந்து நின்று, தான் தகுதியற்றவன் என்றும், ஆனால் கர்த்தராகிய இயேசு தனக்குப் பதிலாகப் பாடுபட்ட மரணத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதாகவும், இயேசு தன் பாவங் களுக்காகப் பரிகாரம் செய்தார் என்றும், அதை வார்த்தையின் மூலமாக விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்வதாகவும் சாட்சி சொல்கிறான்; மேலும் அவன் இனிமேல் தன் வாழ்க்கையை மாற்றி சரியாக வாழப்போகிறான். 32 ஆனாலும் அந்த இருதயத்தில் இன்னும் ஆசைகள், தவறு செய்வதற்கான தீமையின் வேர் இருக்கிறது; ஏனென்றால் மரம் வெட்டப் பட்டிருக்கிறது, தான் செய்த காரியங்களுக்கு மட்டுமே, அதாவது தான் செய்த பாவங்களுக்கு மட்டுமே மன்னிக்கப்பட முடியும், ஆதாம் செய்ததற்கல்ல. தான் செய்ததற்குக் மன்னிப்பு கேட்கலாம், ஆனால் ஆதாம் செய்ததற்குக் மன்னிப்பு கேட்க முடியாது. அப்போது இயேசு கிறிஸ்துவின் இரத்தம், பரிசுத்தமாக்குதலின் மூலம் உள்ளே வந்து, அந்த இருதயத்தைச் சகல பாவங்களிலிருந்தும் சுத்திகரித்து, பாவத்தின் ஒவ்வொரு கூறுகளையும் வேரோடு பிடுங்கி எறிகிறது. 33 பரிசுத்தமாக்குதல் (Sanctify) என்ற வார்த்தையைக் கண்டு மக்கள் இடறலடை கிறார்கள்; ஆனால் அது ஒரு கிரேக்கக் கூட்டு வார்த்தை, அதற்கு "சுத்திகரிக்கப்பட்டு, ஊழியத்திற்காகப் பிரித்து வைக்கப்படுவது" என்று அர்த்தம். பலிபீடம் பாத்திரத்தைப் பரிசுத்தப்படுத்தி அதைச் சுத்திகரித்தது, அது ஊழியத்திற்காகப் பிரித்து வைக்கப்பட்டது. ஆனால் ஊழியத்திற்காகப் பிரித்து வைக்கப் படுவது என்பது இன்னும் ஊழியத்தில் இருப்பது அல்ல; ஆனால் பரிசுத்த ஆவியானவர் இந்தப் பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரத்திற்குள் வரும்போது, அவர் அதை நிரப்பி, கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடுத்துகிறார். 34 மூன்று அறைகள் கொண்ட வீடு; நீங்களே மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறீர்கள்; நீங்கள் ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவி ஆகிய மூன்று பிரிவுகளாக இருக்கிறீர்கள். தேவன் மூன்றில் வசிக்கிறார், தேவன் மூன்றில் பூரணப்படுகிறார், சபை மூன்றில் பூரணப் படுகிறது. வேதாகமத்தின் கணிதம் தவறு வதில்லை. ஆராதனையில் ஏழுகள், சோதனை களில் இருபத்தி நான்குகள், ஜூபிலிக்களில் நாற்பது மற்றும் ஐம்பது; வேதாகமத்தின் கணிதம் மிகச் சரியாக இயங்குகிறது. தேவன் மூன்றில் பூரணராக இருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஒரே பூரணமான தேவனாக, ஒரே தேவனின் மூன்று அலுவலகங்களாக இருக்கிறார்கள். 35 சபையானது நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவற்றின் மூலம் பூரணப்படுகிறது. பின்பு நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரிக்கப்படுகிறீர்கள். "இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒருமுறை சுத்திகரிக்கப் பட்டவனுக்கு இனி பாவஞ் செய்யவேண்டுமென்கிற ஆசை இருப்பதில்லை." நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக் குட்பட்டிருக்கிறீர்கள். 36 இந்நாட்களில் இதைக் குறித்த கேலிகள் இவ்வளவு அதிகமாக இல்லாதிருந்தால், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு உண்மையான சபையையும், எந்த மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஐக்கியத்தையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் உள்ளே சென்று, தாங்கள் அதைப் பெற்றுவிட்டதாக உரிமை கோரும் பாசாங்கு செய்கிறவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்கள் ஏதோ ஒரு வெளிப்படையான உணர்ச்சியைக் காட்ட சத்தமிடுகிறார்கள், அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள்; ஆனால் சகோதரரே, "அவர் களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீ ர்கள்" என்று இயேசு சொன்னார். கோதுமை யோடு கூட முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்கின்றன, ஆனால் நீங்கள் அவர்களை அவர்களுடைய கனிகளினால் அறிந்து கொள்வீர்கள். "நீங்கள் அவைகளைப் பிடுங்க வேண்டாம், அவைகளை வளர விடுங்கள். அறுவடைக்காலத்துத் தூதர்கள் அவைகளைப் பிரிப்பார்கள்." 37 மூன்று அறைகள் கொண்ட வீடு, மூன்று பிரிவுகள் கொண்ட சேவை: ஒன்று உங்கள் சரீரம், கிறிஸ்துவுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது; மற்றொன்று உங்கள் ஆவி, கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது; மற்றொன்று உங்கள் ஆத்துமா, கிறிஸ்துவின் மேல் உங்களுக்கு இருக்கும் விசுவாசம். மூன்று அறைகள் கொண்ட வீடு, முழுமையாகவும், முற்றிலு மாகவும் ஜீவனுள்ள தேவனுடைய சேவைக்காக அர்ப்பணிக்கப் பட்டது. விசுவாசத்தினால் நீதிமா னாக்கப்படுதல்; இரத்தத்தினால் பரிசுத்தமாக் கப்படுதல்; பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல், தேவனுடனான சமாதானத்திலும் இளைப் பாறுதலிலும் பிரவேசித்தல். 38 இன்று சபைகளில் இவ்வளவு பின்மாற்றங்கள் இருப்பதிலும், இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதிலும் ஆச்சரியமில்லை; ஏனென்றால் அவர்கள் அது சாகும் இடம் வரைக்கும் தேவனோடு முழுமையாக வருவ தில்லை. மனிதன் தனது சொந்த அறிவார்ந்த சிந்தனைக்குச் சாகிறான். 39 நினைவில் கொள்ளுங்கள், ஒரு சிறிய விதை, அது அழுகிப்போகும் வரை எந்த ஜீவனையும் கொடுக்க முடியாது. ஒரு சோள மணியை நிலத்தில் போடுங்கள், அது எவ்வளவு மஞ்சளாக இருக்க முடியுமோ அவ்வளவு மஞ்சளாக, கடினமாக, உறை போடப்பட்டதாக இருக்கிறது; ஆனால் அந்தச் சோளம் மரித்துத் தன் சரீரத்திற்கு அழுகிப்போகும் வரை, அது ஒருபோதும் இன்னொரு முளையைத் வெளிக் கொண்டுவராது. புதிய ஜீவன் உள்ளே வரும் போது, அது முதல் ஜீவனிலிருந்து முற்றிலும், முழுவதுமாக மாறுபட்டது; அது மென்மை யாகவும், வளைந்து கொடுப்பதாகவும், நெகிழ் வாகவும் இருக்கிறது. வெளியே உறை போடப்பட்ட அந்தச் சிறிய ஜீவ அணுவிலிருந்து அது வருகிறது. 40 தேவனுடைய ஆவியால் பிறந்த ஆணும் அல்லது பெண்ணும் அப்படியே இருக்கிறார்கள். நீங்கள் புத்திஜீவிதத்தில் மிகவும் சிறந்தவராக இருக்கலாம்; ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்து, உங்கள் புத்திஜீவித்தம் உங்கள் சிந்தனைகளிலிருந்து அழுகிப்போய், நீங்கள் கிறிஸ்துவை மட்டுமே பற்றிக்கொண்டு, அவர் தம்முடைய ஆவியினால் உங்களை நிரப்பும் வரை... அப்போதுதான் உலகத்தின் காரியங்கள் உங்களுக்குப் பைத்தியமாகத் தோன்றும், தேவனுடைய அன்பு உங்கள் வாழ்க்கையில் பெரிதாகவும் முதன்மையானதாகவும் இருக்கும். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். 41 மோசே, அல்லது ஆரோன், மற்றும் தீர்க்கதரிசிகள் போன்றோர்... இந்தப் பரிசுத்த இடத்திற்குள் வரும் வரை எந்தப் பிரசங்கிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உரிமை இல்லை என்று நான் இன்று நம்புகிறேன். அங்கேதான் அற்புதங்கள் நடந்தன. 42 இன்றைய இயற்கையான சபையால் அற்புதங்களை நம்ப முடியாததில் ஆச்சரிய மில்லை. அவர்கள் தேவனோடு இளைப்பாறும் அந்த அற்புதம் நடக்கும் இடத்திற்கு ஒருபோதும் வரவில்லை. அங்கேதான் ஆரோனின் கோல் துளிர்த்தது; மரித்துப்போன ஒன்று, வனாந்தரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய காய்ந்த குச்சி, அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திலே புது ஜீவனைப் பெற்று, பூக்கள் பூத்து, துளிர்த்து, இலைகளைத் தந்தது. ஏன்? அது மகா பரிசுத்த ஸ்தலத்திலே கிடந்தது. 43 மரித்த பாவியாக, அழுகிப்போன, மாம்ச சிந்தனையும் எண்ணமும் கொண்ட, தேவனுடைய வல்லமையை விமர்சிப்பவராக ஒருவரை நீங்கள் எடுத்துக்கொண்டு, அவரைப் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திற்குள் கொண்டு வாருங்கள்; அவருக்கு ஏதோ ஒன்று நடப்பது நிச்சயம், அவர் தேவனோடு அந்தத் தனிமையான இடத்திற்குள் பிரவேசிப்பார். 44 "அவர் காரிருளின் மத்தியில் வாசம் பண்ணுகிறார்" என்று மோசே அடுத்த அதிகாரத்தில் சொல்கிறார். அங்கேதான் தேவன் வசிக்கிறார். ஜீவன் தங்கும் இடம் அதுதான், அழுகிப்போன ஊழலின் மத்தியில். ஜீவன் எங்கே தங்குகிறது? விதை அழுகிப்போன பிறகு அதற்குள் தங்குகிறது. அது தனக்குத் தானே மரிக்கும்போது, அது ஒரு புதிய ஜீவனை வெளிக்கொண்டுவருகிறது. 45 தேவன் எங்கே தங்குகிறார்? நீங்கள் உங்களுக்குத் தானே மரித்து, அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கத் தயாராக இருந்தால் அவர் உங்களோடு தங்குவார் - சேவை, சரீரம்; புத்திஜீவித்தம், ஆவி, சிந்தனைகள்; மற்றும் ஆத்துமா, தேவன் மீதான உங்கள் விசுவாசம் - மூன்று அறைகள் கொண்ட வீடு. 46 இப்போது, மோசே அதை உருவாக்கிய போது, இந்த வீட்டிற்குச் செல்ல ஒரு அணுகுமுறை (approach) இருந்தது. இப்போது அது எத்தகைய அணுகுமுறை என்பதைக் கவனியுங்கள்: நீங்கள் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பே, ஆராதனைக்குள் நுழை வதற்கு முன்பே நீங்கள் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். இப்போது, மக்கள் தம்மைத் தொழுதுகொள்ளும்படி இந்தக் கட்டிடத்திற்கு வருவதற்கு தேவன் ஒரு வழியை உண்டாக்கியபோது, "எந்த நுகமும் தன்மேல் ஏற்றப்படாத ஒரு சிவப்பான கிடாரியை எனக்காகக் கொண்டுவாருங்கள்" என்று தேவன் சொன்னதாக வேதவசனங்களில் காண்கிறோம். கிடாரி, அது சிவப்பாக, இரத்தச்சிவப்பாக இருக்க வேண்டும். சிவப்பு என்பது மீட்பை, இரத்தத்தை, சிவப்பைக் குறிக்கிறது. 47 அதனால்தான் நம்முடைய பாவங்கள் சிவப்பாக இருக்கின்றன, அதனால்தான் கிறிஸ்துவின் இரத்தம் சிவப்பாக இருக்கிறது. நீங்கள் ஒரு சிவப்பு நிற கண்ணாடியை எடுத்துக்கொண்டு, சிவப்பு நிறக் கண்ணாடியின் வழியாகப் பாருங்கள், உங்களுக்கு என்ன நிறம் கிடைக்கும் என்று பாருங்கள். சிவப்பின் வழியாகச் சிவப்பைப் பார்த்தால் வெண்மை யாகத் தெரியும். நம்முடைய பாவங்கள் இரத்தச்சிவப்பாக இருந்தாலும், தேவன் தம்முடைய குமாரனின் இரத்தத்தின் வழியாக அவற்றைப் பார்க்கும்போது, அவை உறைந்த பனியைப் போல வெண்மையாக இருக்கின்றன. சிவப்பு, மீட்பு; சிவப்பின் வழியாகச் சிவப்பு வெண்மையாகத் தெரிகிறது. நீங்கள் உங்கள் இரட்சகராக அறிக்கை செய்துள்ள அவருடைய குமாரனின் இரத்தத்தின் வழியாகத் தேவன் பார்க்கும்போது, அவர் உங்கள் பாவங்களை இனி காண்பதில்லை; அவை உறைந்த பனியைப் போல வெண்மையாக இருக்கின்றன, சிவப்பின் வழியாகச் சிவப்பு. 48 அவர், "ஒரு சிவப்பான கிடாரியை எடுங்கள்" என்று சொன்னார்; மீண்டும் அது கிறிஸ்துவின் மாதிரி; அவிசுவாசிக்குத் தீட்டுக்கழிக்கும் ஜலத்தை (பிரித்தெடுக்கும் தண்ணீரை) உண்டாக்க அவர் விரும்பினார்; "எந்த நுகமும் தன் கழுத்தின்மேல் ஏற்றப்படாத இந்த கிடாரியை எடுங்கள்" என்று அவர் சொன்னார். எத்துடனும் நுகம் பூட்டப்படாமல் இருப்பதை இது குறிக்கிறது. 49 இன்றைக்குப் பிரச்சினை என்ன வென்றால், நாம் எல்லாவற்றுடனும் நுகம் பூட்ட முயற்சிக்கிறோம். சபைகள், ஸ்தாப னங்கள் உலகத்தோடு நுகம் பூட்ட முயற்சிக்கின்றன. ஆனால் தேவனுடைய வல்லமை தேவனைத் தவிர வேறு யாருடனும் நுகம் பூட்டப்படுவதில்லை. எந்த ஸ்தாபனமும், "எங்களிடம் அது இருக்கிறது" என்று சொல்ல முடியாது. தேவனிடம் அது இருக்கிறது. எந்தச் சபையும், எந்த ஸ்தாபனமும், எந்தக் குறிப்பிட்ட மனிதனும், எந்தக் கோட்பாடும் அல்ல, ஆனால் தேவனிடம் அது இருக்கிறது. "அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமலிருங்கள் (நுகம் பூட்டாதிருங்கள்). ஆனால் அவர்கள் நடுவிலிருந்து வெளியே வாருங்கள்," தேவனோடு நுகம் பூட்டுங்கள். "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்று இயேசு சொன்னார். 50 எத்துடனும் நுகம் பூட்டப்படாத, தன் கழுத்தின்மேல் ஒருபோதும் நுகம் ஏற்றப் படாதது; இந்தக் கிடாரியானது பிரதான ஆசாரியனால் கொல்லப்பட வேண்டும். கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்குச் சாட்சியாய் இருந்தவன் காய்பா என்னும் பிரதான ஆசாரியன் தான். இஸ்ரவேல் சபை அனைத்திற்கும் முன்பாக அது கொல்லப்பட வேண்டியிருந்தது; இயேசுவை ஆக்கினைக் குட்படுத்தி அவருடைய மரணத்திற்குச் சாட்சியாக இருந்தவர்கள் இஸ்ரவேலரே. உலகத்தின் அவிசுவாசத்தோடு நுகம் பூட்டப் பட்டவர்கள். 51 கவனியுங்கள், பின்பு இந்தக் கிடாரி எரிக்கப்பட வேண்டும்; அதின் குளம்புகள், அதின் தலை, அதின் கொம்புகள், கிடாரியில் உள்ள சாணம், அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். அது எரிக்கப்படுகையில், அதில் சிவப்பு நூல், கேதுருக்கட்டை, மற்றும் ஈசோப்பு ஆகியவை போடப்பட வேண்டும். 52 வேதாகமத்தில் சிவப்பு (Scarlet) என்பது இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆட்டுக் கம்பளியைக் குறிக்கிறது; சிவப்பு நூல், அந்தச் சிவப்பு நிறம் "மீட்பை" அர்த்தமாக்குகிறது. அந்தச் சிவப்பு கம்பளிநூல் கிடாரியுடன் உள்ளே எறியப்பட வேண்டும். 53 கேதுருக்கட்டை சிலுவையைக் குறிக்கிறது; சிலுவை, கேதுருக்கட்டை, வெண்மையாகவும் அதில் சிவப்புக் கோடுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது; அந்த வெண்மை சிலுவையின் நீதியைக் குறிக்கிறது, அந்தச் சிவப்பு அதை நீதிமானாக்கின இரத்தத்தைக் குறிக்கிறது. சிலுவை ஒரு சாபமாக இருந்தது, "மரத்திலே தூக்கப்படுகிறவன் எவனும் சபிக்கப்பட்டவன்." இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அதில் வழியும் வரை சிலுவை ஒரு சாபமாகவே இருந்தது; அதன் பின்பு நாம் அதை நம் இதயங்களில் அணைத்துக்கொள்கிறோம், ஏனென்றால் அது தேவனுடைய நீதியாக இருக்கிறது. கேதுருக் கட்டையில் உள்ள அந்தச் சிவப்புதான் அந்த வெண்மையை நீதிமானாக்குகிறது. கேதுருக் கட்டை அதனுடன் எரிக்கப்பட வேண்டும். 54 பின்பு சிவப்பு நூல், கேதுருக்கட்டை ஆகியவற்றோடு ஈசோப்பும் உள்ளே எறியப்பட வேண்டும். ஈசோப்பு என்பது சாதாரண களைச்செடியைத் தவிர வேறில்லை; அதாவது சுவிசேஷமானது ஒருபோதும் டாக்டர் பட்டங்கள், பி.எச்.டி (Ph.D) பெற்றவர்களால் போதிக்கப்படக்கூடாது; அது தாழ்மையுடன், உங்களுக்கு முன்பாக இருக்கும் களைச் செடிகளைப் போல அத்தனைத் தாழ்மையுடன் போதிக்கப்பட வேண்டும். சுவிசேஷம் ஒரு போதும் மக்களுக்குச் சிக்கலானதாக மாற்றப் படக்கூடாது, அது தாழ்மையானதாக இருக்க வேண்டும். 55 இஸ்ரவேலில் வாசற்படியின் நிலைக் கால்களில் பூசப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் அவர்கள் தோய்த்தது ஈசோப்புதான். ஈசோப்பு, களைச்செடிகள், வெறும் சாதாரணக் களைச்செடிகள்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தின் (பிரித்தெடுக்கும் தண்ணீரின்) சுவிசேஷத்தின் தாழ்மையை அது உருவாக்குகிறது; ஏனென்றால் தீட்டுக்கழிக்கும் ஜலம் என்பது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அவைகள் ஒன்றாகச் சேர்த்து எரிக்கப்பட வேண்டியிருந்தன: கிடாரி, சிவப்பு நூல், கேதுருக்கட்டை மற்றும் ஈசோப்பு, அனைத்தும் ஒன்றாக எரிக்கப்பட்டன. அந்தச் சாம்பல் வெளிப்பிராகாரத்தில்... ஒரு பரிசுத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டியிருந்தது. 56 தேவனே, இது இருதயங்களில் ஆழமாகப் பதியட்டும்: தேவனுடைய வார்த்தையைப் பரிசுத்தமற்ற வாயிலிருந்து பிரசங்கிக்க உரிமை இல்லை. இயேசு கிறிஸ்து முன்பு ஒரு காரியமாக இருந்தார், இப்போது வேறொன்றாக இருக்கிறார் என்று சொல்லும் ஒரு மனிதனின் வாயிலிருந்து அது பிரசங்கிக்கப் படக்கூடாது. கர்த்தருடைய சேவைக்கு அர்ப்பணிக்கப் பட்ட பரிசுத்தமாக் கப்பட்ட உதடுகளின் மூலமாக, ஜீவனுள்ள தேவனு டைய வல்லமையால் அது பிரசங்கிக்கப்பட வேண்டும். 57 இந்தச் சாம்பல், தீட்டுக்கழிக்கும் ஜலம் (பிரித்தெடுக்கும் தண்ணீர்), ஒரு பரிசுத்தமான இடத்தில் வைக்கப்படட்டும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு, அவரை இரட்சகராக அறிக்கை செய்கிற எந்த விசுவாசியும், உலகத்திற்குரிய எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அவர் அதைக்குறித்து விரைவாக மனந்திரும்ப வேண்டும்; ஏனென்றால் தீட்டுக்கழிக்கும் ஜலமாகிய அந்த வார்த்தைகள் ஒரு பரிசுத்தமான இடத்தில் வைக்கப்பட்டு, சுத்தமான கைகளால் கையாளப்பட வேண்டும். 58 உலகத்தின் கவலைகள் மற்றும் காரியங்களிலிருந்து முதலில் பரிசுத்தமாக்கப் படாமல், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. 59 தீட்டுக்கழிக்கும் ஜலம் (பிரித்தெடுக்கும் தண்ணீர்), அது என்ன செய்தது? ஒரு அவிசுவாசி, அல்லது வழிதப்பிப்போன இஸ்ரவேலில் பிறந்த ஒருவர், அல்லது ஒரு அந்நியன் சபைக்குள் வரும்போது, முதலில் பிராகாரத்திற்கு வெளியே ஒரு காரியம் நடந்தது; அங்கேதான் இறைச்சி பரிமாறப்பட்டது, அங்கேதான் வார்த்தை பிரசங்கிக்கப்பட்டது; சுத்தமான இருதயமும் சுத்தமான கைகளும் கொண்ட மனிதன், இந்தச் சிவப்பு நூலையும், கிடாரி, கேதுருக்கட்டை மற்றும் ஈசோப்பு எரிக்கப்பட்ட சாம்பலையும் கையாண்டு, தீட்டுக் கழிக்கும் ஜலத்தை (பிரித்தெடுக்கும் தண்ணீரை) எடுத்து இந்த மனிதன் மேல் தெளித்தான். 60 வார்த்தையைப் பிரசங்கிக்கிற பிரசங் கியார், சுத்தமான, கலப்படமற்ற இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும்; அவருடைய கைகள் உலகத்தின் காரியங்களால் தீட்டுப்படாமல் இருக்க வேண்டும்; அது பரிசுத்தமான இடத்தில் வைக்கப்பட்டு, பரிசுத்தமான கைகளால் ஊழியம் செய்யப் படுகிறது. வார்த்தையாகிய தண்ணீரினால், பிரித்தெடுத்தலினால் நாம் கழுவப் பட்டிருக்கிறோம் என்று எபேசியர் 6-ம் அதிகாரம் (எபே 5:26) சொல்லுகிறது. "கேள்வியினாலே விசுவாசம் வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வரும்." 61 நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாம் இந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். இங்கே கூடாரம் அமைக்கப் பட்டுள்ளது; ஆனால் உள்ளே நுழைவதற்கு முன்பாக, தேவனை விட்டு விலகி அந்நியனாய் இருக்கிறவன், ஒருமுறை இருந்து பின்மாறிப் போனவன், அல்லது உலகத்திற்குள் சென்றுவிட்டவன், அல்லது இஸ்ரவேலுக்கு வெளியே பிறந்தவன் எவனும், முதலில் வந்து தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் (பிரித்தெடுக்கும் தண்ணீரினால்) தெளிக்கப்பட வேண்டும்; அவனுடைய வாஞ்சையும், அன்பும், விருப் பமும் தேவனுடைய வார்த்தையின் மீதே இருக்கும்படியாகவும், எல்லாவற்றையும் விட அதையே பெரிதாக எண்ணும்படியாகவும், உலகத்தின் காரியங்களிலிருந்து அவனை அது பிரித்தெடுக்கிறது. 62 பின்பு அவர்கள் கிடாரியின் இரத்தத்தை என்ன செய்தார்கள்? அவர்கள் கிடாரியின் இரத்தத்தை எடுத்து ஒரு கிண்ணத்தில் பிடித்து, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று, அங்கே வாசலின் குறுக்கே ஏழு முறை பூசினார்கள். பின்பு இந்த ஆராதனை செய்கிறவன், அல்லது தெளிக்கப்பட்டவன், உலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டவன் இப்போது வருகிறபோது, ஒரு கொள்கையை நோக்கியோ, ஒரு ஸ்தாபனத்தை நோக்கியோ பார்க்காமல், மரித்த பலியின் இரத்தத்தை நோக்கிப் பார்க்கும்படியாக வாசலுக்குள் நுழையும்போது, அவன் அதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஏழு முறை இது தெளிக்கப்பட்டது. இது பூமியில் மனிதர்கள் இருக்கப்போகும் ஏழாயிரம் ஆண்டு களையும் குறிக்கிறது; ஏனென்றால் இரத்தமே இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்; தேவன் மனிதனைச் சந்திக்கும் ஒரே ஐக்கியத்தின் அடிப்படை, இரத்தத்தின் ஐக்கியமே ஆகும். 63 இங்கே இப்போது பிராகாரங்களிலிருந்து ஐக்கியத்திற்குள் வருகிறோம். விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள் நீங்கள் வருவதற்கு முன்பாக, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். வேதாகமத்தை நீங்கள் எவ்வளவு நன்றாக அறிந்திருந்தாலும், அது உங்களுக்கு எவ்வளவு நன்றாக விளக்கப் பட்டிருந்தாலும், நீங்கள் கர்த்தராகிய இயேசு வின் இரத்தத்தை அங்கீகரித்து, புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாட்டம், பெண்கள் ஒழுக்கக்கேடான ஆடைகளை அணிதல் போன்ற உங்கள் உலகப் பழக்கங்களிலிருந்தும், நீங்கள் உதவிக்காரர்கள் (deacons) மற்றும் சபை அங்கத்தினர்கள் மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சீட்டாட்டம் ஆடுதல், பூல் ரூம்களுக்குச் செல்லுதல் போன்ற உலகத்தின் காரியங்களிலிருந்தும் நீங்கள் சுத்திகரிக்கப்பட்டுப் பரிசுத்தமாக்கப்பட வேண்டும். நீங்கள் அதிலிருந்து பிரித்தெடுக்கப் பட வேண்டும், அதைச் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது, அது உங்கள் சுபாவத்தை மாற்றுகிறது; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே அதைச் செய்ய முடியும். 64 சரியாக! ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்யப்பட்ட அதே நாளிலிருந்து, தேவன் மனிதனோடு மீண்டும் ஐக்கியம் கொள்ள ஒரு ஆயத்தத்தை ஏற்படுத்தினார், அது இரத்தத்தின் மூலமாகவே இருந்தது என்பதை ஒவ்வொரு தலைமுறைக்கும் நீங்கள் இரத்தத்தை அங்கீகரிக்க வேண்டும். உங்கள் சபை எவ்வளவு நல்லதாக இருந்தாலும், உங்களிடம் எவ்வளவு பெரிய ஸ்தாபனம் இருந்தாலும், நீங்கள் எவ்வளவு நன்றாகத் தயாராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், நீங்கள் என்ன அந்நிய பாஷைகளில் பேசினாலும் எனக்குக் கவலையில்லை; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்தெடுக்கிறது. 65 நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? அர்ப்பணிக்கப்பட்ட அந்த முதல் ஆலயத்திற்குள் நாம் வருகிறோம். அது என்ன? முதலில் வார்த்தையைக் கேளுங்கள், பின்பு வந்து இரத்தத்தை அங்கீகரியுங்கள். ஆம். 66 இன்று மக்கள், "பரிசுத்தமாக்குதல், பழைய காலத்துப் பழக்கம்" என்று சொல்கிறார்கள். பரிசுத்தமாக்குதல் (Sanctify) என்றால், "சுத்தமாக இருத்தல்" என்று அர்த்தம். மேலும் தன்னைத் தன் பாவங்களிலிருந்து சுத்திகரித்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அங்கீகரிக்க முடியாத ஒரு மனிதனால், ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையோடு ஒருபோதும் ஐக்கியம் கொள்ள முடியாது, உங்களால் அதைச் செய்ய முடியாது. 67 ஜீவனுள்ள தேவனுடைய ஸ்தாபன சபைகளை நான் குறிப்பிடவில்லை, நம்மிடம் அவைகள் ஏராளமாக உள்ளன, நான்கு, ஐந்து வெவ்வேறு ஸ்தாபனங்கள், அவை மற்றவைகளைப் போலவே நல்லவைதான்; ஆனால் இரத்தம் பூசப்படும் வரை அவன் ஒன்றுமில்லாதவன், அவன் முற்றிலும் ஆக்கினைக்குள்ளானவன். ஓ, அருமையான ஊற்று, அது உறைந்த பனியைப் போல நம்மை வெண்மையாக்குகிறது; வேறொரு ஊற்றையும் நான் அறியேன், இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. 68 எந்த ஸ்தாபனமும் இல்லை, எந்தச் சபையும் இல்லை, எந்தக் கட்டிடமும் இல்லை, எந்தத் தடையும் இல்லை, இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை; சுத்திகரிப்புக்காக நான் அறிந்த ஒரே ஊற்று அதுதான். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள வரும் ஒவ்வொரு நபரும், மரித்த ஒரு பலி இருந்தார் என்பதையும், நீங்கள் இந்த ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கும்படியாக அவரு டைய இரத்தம் சிந்தப்பட்டது என்பதையும் முதலில் அங்கீகரித்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 69 தேவனுடைய ஆவியால் பிறந்த மக்களைக் குறித்து நேற்று இரவு நான் சொல்ல முயன்றது என்னவென்றால், அவர்கள் உலகத்தின் காரியங்களைப் பார்க்காததில் ஆச்சரியமில்லை; ஏனென்றால் அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள், அவர் களுடைய ஆவி மேலிருந்து வருகிறது; அங்கே பரிசுத்தமும் நீதியும் வசிக்கிறது, அங்கே இயேசுவின் இரத்தம் அவருடைய இரத்தம் தோய்ந்த வஸ்திரத்தின் மேல், தேவனுக்கு முன்பாகத் தினந்தோறும் தொங்குகிறது. தேவதூதர்கள் அதற்கு முன்பாகப் பணிகிறார்கள், பரலோகத்திலுள்ள அனைத்தும் அதற்குப் பணிகின்றன, பரலோகத்திற்குச் செல்லும் பூமியிலுள்ள அனைத்தும் அதற்குப் பணியும். நாம் அனைவரும் இரத்தத்தை அங்கீகரிக்க வேண்டும். 70 இரத்தத்தின் அந்த ஏழு கோடுகளுக்குக் கீழே நாம் வரும்போது, ஆராதனை செய்கிறவர்கள் இப்போது ஐக்கியத்திற்குள் வருகிறார்கள். ஓ, சிலர் வெளியே சென்று வார்த்தையைக் கேட்கிறார்கள், அவர்கள் ஒரு வேதப்பள்ளிக்குச் செல்கிறார்கள், சபையின் போதனைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டதாக அவர்கள் நினைக்கிறார்கள், தங்களுக்குப் பிரசங்கிக்க உரிமை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தங்களைத் தங்கள்... இருந்து சுத்திகரிப்பதை அங்கீகரிக்கும் வரை அவர்களுக்குப் பிரசங்கிக்க உரிமை இல்லை. 71 பிரசங்கிகள் தெருவில் செல்லும்போது, தங்கள் காலர்களைத் திருப்பிக்கொண்டு, வாயில் சிகரெட்டுடன் செல்கிறார்கள்; மற்றவர்கள் இங்கே குளிக்கும் கடற்கரைகளிலும், மற்ற எல்லா இடங்களிலும் சென்று, தங்கள் சபையாருடன் படுத்துக் கொள்கிறார்கள், சபையில் பன்கோ (bunco) விளையாட் டுகளையும் விருந்துகளையும் நடத்துகிறார்கள், மேலும் தங்களைப் பிரசங்கிகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இல்லை ஐயா, அது மனிதனால் உருவாக்கப்பட்ட பிரசங்கிகள்; தேவன் அழைத்த பிரசங்கிகள் இரத்தத்தின் வழியாக வருகிறார்கள். 72 எனக்குக் கவலையில்லை, உங்கள் ஸ்தாபனம் இந்த நாட்டைப் போலப் பழமையானதாக இருக்கலாம்; ஆனால் இரத்தமே தேவன் அங்கீகரித்த முதல் காரியமாக இருந்தது, ஆத்துமாவைச் சுத்திகரிப்பதற்கான அவருடைய ஒரே ஆயத்தம் அதுவே. தேவன் அங்கீகரிக்கும் ஒரே காரியம் அதுவே, தேவன் ஐக்கியம் கொள்ளும் ஒரே காரியமும் அதுவே, இரத்தத்தின் கீழ் இருப்பவர்களுடன் மட்டுமே. "நான் இரத்தத்தைக் காணும்போது, நான் கடந்து போவேன், உங்களைக் கடந்து போவேன்." மனிதன் இரத்தத்தை வழியாக மட்டுமே அதை அங்கீகரிக்க வேண்டும். 73 அவன் என்ன செய்கிறான்? இப்போது இந்த மூன்று அறைகளுக்குள் வருகிறான். அவன் தொழுதுகொள்ள உள்ளே வருகிறான். முதலில், அவன் உள்ளே நுழையும்போது, அங்கே மூன்று காரியங்கள் உள்ளன. வெளியே அதை அடைவதற்கு மூன்று கட்டங்கள் உள்ளன: முதலாவது பிரித்தெடுத்தல் வழியாக, வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவுதல்; இரண்டாவது, தான் கடந்து செல்லும் இரத்தத்தை அங்கீகரித்தல்; பின்பு அவன் இரத்தத்திற்குக் கீழே வரும்போது, அவன் பரிசுத்தவான்கள் அனைவருடைய ஐக்கியத்திற் குள்ளும் வருகிறான். மரித்த அந்த ஒருவருடைய ஆவியினால், வாசற்படியின் மேல் தங்கள் இரத்த அடையாளத்தைப் பூசின அந்த ஒருவருடைய ஆவியினால் அவன் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறான்; பின்பு அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான், பின்பு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு விசுவாசிகளின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறான். சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழேதான் தேவன் சந்திக்கிறார். 74 அங்கேதான் தேவன் முதல் ஆசரிப்புக் கூடாரத்தில் சந்தித்தார், அங்கேதான் தேவன் இரண்டாவது ஆசரிப்புக் கூடாரத்தில் சந்திக்கிறார், அதற்காகத்தான் இந்த ஆசரிப்புக் கூடாரம் இன்று காலை இங்கே கட்டப்பட்டுள்ளது. அது என்ன? அங்கே சபை இருக்கிறது, பிராகாரங்கள்; இங்கே பரிசுத்த ஸ்தலம் இருக்கிறது, பலிபீடம்; இங்கே பிரசங்கி நிற்கும் இடம் இருக்கிறது, மகா பரிசுத்த ஸ்தலம், இங்கே மக்களுக்கு வார்த்தை ஊழியம் செய்யப்படுகிறது. மேலும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வருவதற்கு, உள்ளே இருந்தாலொழிய எந்த மனிதனுக்கும் பிரசங்கிக்க உரிமை இல்லை. 75 இப்போது, அவன் இந்த இடத்திற்குள் நுழையும்போது, அவன் வந்து வார்த்தையை அங்கீகரித்து, வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்படுகிறான்; அடுத்து, அவன் இரத்தத்தை அங்கீகரிக்கிறான், அவன் பரிசுத்தமாக்கப் படுகிறான்; பின்பு அவன் விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள்ளும் தேவனுடனும் கொண்டு வரப்படுகிறான். பின்பு இந்த ஆசரிப்புக் கூடாரத்தில்... ஓ, நான் நன்றாக உணர்கிறேன், மெய்யாகவே பக்திக்குரியதாக உணர்கிறேன்! இந்த ஆசரிப்புக் கூடாரத்தில் பிரதான ஆசாரியனாகிய ஆரோன் இருந்தார். ஓ, என்! இந்த ஐக்கியத்திற்குள் நுழைந்த பிறகு, அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார், அபிஷேகம் பண்ணப்பட்ட பிரதான ஆசாரியர். 76 தாவீது சொன்னார்: "சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய அங்கிகளின் ஓரங்கள்மட்டும் வடிகிற உத்தம தைலத்திற்கு ஒப்பாயிருக்கிறது." 77 இந்த அபிஷேக தைலம் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. ஆரோன் பிரதான ஆசாரியராக இருந்தார், கிறிஸ்துவின் மாதிரி. கவனியுங்கள், அந்த அபிஷேக தைலத்தில் சாரோனின் ரோஜாவினுடையதும், பள்ளத் தாக்கின் லீலியினுடையதுமான சுகந்த வாசனை இருந்தது. சாரோனின் ரோஜா, அந்த அழகான, பெரிய, சிவப்பு மலர், அது அதன் அழகில் நிற்கிறது, அது கிறிஸ்துவைக் குறிக்கிறது; அந்த மலர் நசுக்கப்பட்டு, கசக்கப்பட்டு, அதிலிருந்து வாசனை பிழியப்படும் வரை, கர்த்தருக்குச் சுகந்த வாசனையாக இருப்பதற்கு அந்த மலரிலிருந்து வாசனை திரவியத்தை ஒருபோதும் கொண்டுவர முடியாது. 78 நம்முடைய கர்த்தர் வாழ்ந்த அந்த மகத்தான, அழகான வாழ்க்கை தேவனுடைய கரத்தில் கருவியாக இருந்தது; ஆனால் கல்வாரியில் அவர் நசுக்கப்பட்டு, கசக்கப்பட்டு, துப்பப்பட்டு, அவருடைய ஜீவனே பிழியப் படும் வரை அது ஒரு வாசனை திரவியமாக இருக்க முடியவில்லை. அது நமக்கான அபிஷேகத்தை உண்டாக்கியது. 79 அவர் பள்ளத்தாக்கின் லீலியாக இருந்தார். லீலிகளிலிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள்? அபின் (Opium). அபின் என்ன செய்கிறது? அது வலியைப் போக்குகிறது. அது உங்களைக் கனவுலகத்தில் தூங்க வைக்கிறது. பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார்? பரிசுத்த ஆவியின் அபின் ஒவ்வொரு வலியையும் தணிக்கிறது, ஒவ்வொரு கண்ணீ ரையும் துடைக்கிறது, ஒவ்வொரு மனவேதனை யையும் சரிசெய்கிறது, பள்ளத்தாக்கின் லீலி. 80 அப்படியானால் பிரதான ஆசாரியர் எதினால் அபிஷேகம் பண்ணப்படுகிறார்? இரட்சிப்பிற்காகவும் சுகத்திற்காகவும். அவர் யாராக இருக்கிறார்? அந்தகாரத்தில் உள்ள ஒவ்வொரு வெளிச்சத்தையும் பிரகாசிக்கச் செய்கிற விடிவெள்ளி நட்சத்திரம். 81 அந்த இருண்ட திகிலுக்கும் பலிகளுக்கும் இடையில் ஒரு சிறிய ஜோதி சென்றபோது ஆபிரகாம் தனக்கு ஆணையிட்டு உறுதிப் படுத்தப் பட்டதைப் பெற்றான். பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா, என் ஆத்துமாவிற்குப் பதினாயிரங்களில் சிறந்தவர்! 82 அப்படியானால் ஆரோனின் இடத்தை நிரப்ப ஒரு பிரதான ஆசாரியராக உள்ளே நிற்கும் ஊழியர், ஐக்கியத்தினால் அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். தேவனுடைய ஆலயத்தில் அவர் ஒரு ஸ்தாபன தடையை வரைய முடியாது. இது-இந்தச் சபை பிரஸ்பிட்டீரியனுக்குச் சொந்தமானது, இந்த இடம் மெத்தடிஸ்டுக்கு, அல்லது பாப்டிஸ்டுக்கு, அல்லது பெந்தெகொஸ்தேக்கு, அல்லது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குச் சொந்தமானது என்று நீங்கள் சொல்ல முடியாது; தங்கள் பாவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ஆவி யினால் நிரப்பப்பட்ட ஒவ்வொரு மனிதனும், கர்த்தருடைய தைலத்தின் ஐக்கியத்தின் மகிழ்ச்சியைப் பெறுவதற்கு இது ஒரு திறந்த வீடாக இருக்க வேண்டும். ஓ, தொழுதுகொள்ள எப்பேர்ப்பட்ட ஒரு இடம்! 83 ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும், ஆவியினால் பிறந்த ஒவ்வொரு சகோதரனுக்கும் தடையின்றிச் செல்கிறது, இலவசமாக வீட்டிற்குள் வருகிறது. ஆரோன் அபிஷேகம் பண்ணப்பட்டு நின்றார்; இன்று காலை உங்களோடு ஐக்கியம் கொள்ள இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவராக நிற்கிறார், தேவனுடைய சபையாரே, நீங்கள் பிரஸ்பிட் டீரியன், நீங்கள் மெத்தடிஸ்ட், நீங்கள் பாப்டிஸ்ட், யாராக இருந்தாலும், தீட்டுக் கழிக்கும் ஜலத்தின் (பிரித்தெடுக்கும் தண்ணீரின்) வழியாக வந்து, இரத்தத்தை அங்கீகரித்து, பரிசுத்தமாக்கப்பட்டு, சரீரத்திற்குள் ஞானஸ் நானம் பெற்றவர்கள். நீங்கள் என்ன முத்திரையை (brand) வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குக் கவலையில்லை, நீங்கள் தேவனுடைய மகனும் மகளுமாக இருக்கிறீர்கள், இந்த ஐக்கியத்திற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். ஸ்தாபன தடைகள் உங்களை நிறுத்தும், ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களை தேவனுக்குரிய அந்த ஐக்கியத்திற்குள் கொண்டு வருவார். 84 நாம் என்ன செய்திருக்கிறோம்? அது முதல் ஆசரிப்புக் கூடாரத்தின் ஒழுங்கு. அது இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் ஒழுங்காக இல்லாவிட்டால், அது அழிந்து விழும், நீங்கள் அதை வீணாகக் கட்டியிருக்கிறீர்கள். இந்த அழகான கட்டிடத்தைக் கட்டுவதற்காகத் தங்கள் வாழ்வாதாரத்தைத் தியாகம் செய்த மக்களே, இது... 85 நான் இதன் மாதிரியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன், நாங்கள் ஜெஃபர்சன் வில்லில் ஒன்றைக் கட்ட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம், எனக்கு இது பிடித்திருக்கிறது. 86 உங்கள் போதகரை நான் நேசிக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன்; ஆனால் சகோதரரே, கர்த்தருடைய ஆலயத்தின் ஒழுங்கு இருக்கிறது, அது அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயம். 87 அது ஒரு நிழலாக இருந்தது, மோசே அதைக் கண்டான். பின்பு ஒரு நாள், தாவீது தீர்க்கதரிசியுடன் உட்கார்ந்திருந்தபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம், "நான் கேதுருக்களால் செய்யப்பட்ட வீட்டில் வசிப்பதும், என் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இன்னும் வெளியே அந்தக் கூடாரங்களுக்குக் கீழே இருப்பதும் சரியா?" என்று கேட்டான். நாத்தான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்த படியால், தாவீது தேவனோடு சரியாக இருப்பதை அறிந்து, "தாவீது, உன் இருதயத்தில் உள்ளதையெல்லாம் செய், கர்த்தர் உன்னோடு இருக்கிறார்" என்று சொன்னான். 88 தாவீது அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட விரும்பினான். ஆனால் அன்று இரவு தேவன் தீர்க்கதரிசியின் நோக்கத்தைக் கண்டார், ராஜாவின் நோக்கத்தைக் கண்டார், அவர் களுடைய குறிக்கோள்களைக் கண்டார்; அவர், "நீ போய், என் தாசனாகிய தாவீதுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: அவன் யார்? ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்டுத் தொழுவத்திலிருந்து நான் அவனை எடுத்தேன்" என்று சொன்னார். உங்களை எங்கிருந்து அவர் எடுத்தார்? "பெரிய பெயர்களைப் போல உனக்கு ஒரு பெயரை உண்டாக்கினேன்." 89 கர்த்தர் ஒரு நாள் எனக்கு அதைக்காட்டியபோது, நான் நினைத்தேன்: "ஓ தேவனே, நான் என்னவாக இருக்க முடியும்?" அங்கே பின்னால் இருந்த ஒரு ஏழை, சிறிய பிரசங்கி, ஜெஃபர்சன்வில்லைத் தவிர வேறு எதையும் அறியாதவன்; ஒரு நாள் என் குகையின் அருகே, கர்த்தர் அதை எனக்குத் திருப்பினார், நான் அதை முதல் முறையாக வாசித்தபோது, "ஓரல் ராபர்ட்ஸ், அல்லது-அல்லது பில்லி கிரஹாம், அல்லது அவர்களில் சிலரைப் போல நான் உனக்கு ஒரு பெரிய பெயரைக் கொடுத்தேன். நான் உன்னை எங்கிருந்து எடுத்தேன்? நீ என்னவாக இருந்தாய்? ஆனால் நீ ஒரு ஆலயத்தைக் கட்ட நான் அனுமதிக்க முடியாது, ஏனென்றால் உன் குமாரன் அதைக் கட்டும்படி செய்யப் போகிறேன்" என்று சொல்லப்பட்டிருந்தது. ஏனென்றால் அது மாதிரிகளிலும் நிழல்களிலும் இருந்தது. 90 சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான்; ஆனால் மெய்யான தாவீதின் குமாரன் இயேசு கிறிஸ்துவே, அவரே உண்மையான ஆலயத்தைக் கட்டினார்; கன்னிப் பிறப்பில் பிறந்தவர், அவருடைய சரீரத்தில் தேவனுடைய நித்தியமான ஆலயம் இருக்கிறது. 91 ஆனால் மாதிரிகளிலும் அர்ப்பணிப் பிலும், சாலொமோன் ஆலயத்தைக் கட்டினான். நினைவில் கொள்ளுங்கள், அது ஒவ்வொரு விதமான கல்லிலிருந்தும் வெட்டி எடுக்கப் பட்டது, அது இப்படியும் அப்படியும் வெட்டப்பட்டது. அதன் கட்டுமானத்தில் நாற்பது ஆண்டுகளாக, ஒரு ரம்பத்தின் சத்தமோ அல்லது ஒரு சுத்தியலின் சத்தமோ கேட்கப்படவில்லை; அது அவ்வளவு கச்சிதமாக வெட்டப்பட்டது, ஒரு கல்லும் மற்றொன் றிலிருந்து வித்தியாசப்படவில்லை. 92 இன்று காலை இங்கிருக்கும் ஸ்தாபன மக்களே, தேவனுடைய சபையாரே (Church of God), உங்களில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு ஸ்தாபனங்களே, நீங்களும், பெந்தெகொஸ்தே மக்கள் அனைவரும், மற்றும் ஒருமைக் கொள்கையினர் (Oneness), இருமைக் கொள்கையினர் (Twoness), மும்மைக் கொள்கையினர் (Threeness), நீங்கள் யாராக இருந்தாலும், தேவன் ஒரு நோக்கத்திற்காக அதைச் செய்கிறார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? 93 கற்கள் வெவ்வேறு விதமாக, உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப் பட்டன; ஆனால் அவை ஒன்றாக வந்தபோது, அங்கே ஒரு ரம்பத்தின் சத்தமோ அல்லது ஒரு சுத்தியலின் சத்தமோ இல்லை. ஒரு நாள் பிரதான சிற்பி வருவார்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம், ஒருமைக்கொள்கையினர், இருமைக் கொள்கையினர், மும்மைக் கொள்கையினர், தேவனுடைய சபைகள், பெந்தெகொஸ்தே, அசெம்பிளிகள் அனைவரும் முறுமுறுப்பு இல்லாமல் ஒன்றாக வருவார்கள்; நீங்கள் ஒவ்வொரு மூட்டுக்கு மூட்டு இணைக்கப்படுவீர்கள், எல்லோரும் அபிஷேகம் பண்ணப்படுவீர்கள், பிரதான ஆசாரியர் அபிஷேகம் பண்ணிக்கொண்டிருக்கிறார். 94 தேவனுடைய ஆவியால் பிறந்த எந்த மனிதனுக்கும் கைலாகு கொடுக்க அவர் எப்பொழுதும் இந்தக் கட்டிடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டவராக நிற்கட்டும். அவன் எந்தச் சபையைச் சேர்ந்தவன் என்பது முக்கியமல்ல, அவன் உங்கள் சகோதரன், அவள் உங்கள் சகோதரி. நீங்கள் ஒரு ஸ்தாபன தடையை வரையும்போது, கர்த்தராகிய இயேசுவின் சரீரம் முழுவதையும் உங்களால் அங்கீகரிக்க முடியாதபோது, தேவன் இந்த ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு வெளியேறுவார்; ஏனென்றால் நாம் அனைவரும் இரட்சிக்கப் படக்கூடியதாக அவரே மரித்தார். தேவன் ஒரு நோக்கத்திற்காக இதைச் செய்து கொண்டி ருக்கிறார். 95 நினைவில் கொள்ளுங்கள், கேதுருக்கள் லீபனோனில் வெட்டப்பட்டு, யோப்பாவிற்கு மிதக்கவிடப்பட்டு, யோப்பாவிலிருந்து எருசலே முக்கு மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஆலயத்தில் பொன்னினால் மூடப்பட்ட லீபனோனின் உயர்ந்த கேதுருக்களில், எங்கும் ஒரு ரம்பத்தின் சத்தம் இல்லை. 96 அவர்கள் செய்த ஒரு காரியம் இங்கே இருக்கிறது, அதுதான் இன்று சபை செய்து கொண்டிருக்கும் ஒரு காரியமாகும்: இடத்திற்கு இடம் மாறிச் செல்லும் கூடாரமாக இருப்பதிலிருந்து, நிலையான முதல் ஆசரிப்புக் கூடாரத்தை அமைப்பதில் இது நடந்தது: அவர்கள் கண்டுபிடித்தார்கள், அவர்கள் கட்டத் தொடங்கினார்கள், அவர்கள் வெகுதூரம் சென்றார்கள், அவர்கள் ஒரு வேடிக்கையான தோற்றமுடைய கல்லைக் கண்டார்கள். அது ஒரு விசித்திரமான கல்லாக இருந்தது, அது மற்ற கற்களைப் போலத் தெரியவில்லை; அவர்கள் அதை நிராகரித்து, களைச்செடி குவியலில் எறிந்தார்கள், "அந்தக் கல் இந்தக் கட்டிடத்தில் பொருந்தாது" என்று சொன்னார்கள். அவர்கள் அதை உதைத்துக் களைச்செடி குவியலுக்குள் தள்ளினார்கள். ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கொண்டிருந்த போது, அவர்கள் ஒரு இடத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்; சிறிது நேரத்திற்குப் பிறகு கட்டிடத்தில் ஒரு துளை இருந்தது, அதற்குப் பொருத்தமாக அவர்களிடம் எதுவும் இல்லை. 97 அங்கேதான் நீங்கள் சபைகள், நீங்கள் ஸ்தாபனங்கள் இன்று வந்துவிட்டீர்கள்; நீங்கள் கட்டினீர்கள், நீங்கள் பூசினீர்கள், உங்களிடம் கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அங்கே எங்கேயோ ஒரு துளை இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் எதைக் கண்டார்கள்? "நிராகரிக்கப்பட்ட அந்தக்கல், மூலைக்குத் தலைக்கல்லாயிற்று" என்று இயேசு சொன்னார். நிச்சயமாக. 98 நீங்கள் ஸ்தாபனங்களை உருவாக் கினீர்கள், "எங்களிடம் அது இருக்கிறது, மற்றவர்கள் அதில் இல்லை." நீங்கள் தேவனுடைய அன்பாகிய மூலைத் தலைக் கல்லை விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் எத்தனை அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது எனக்குக் கவலையில்லை, உங்களிடம் எத்தனை தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், கிருபையின் எத்தனை கிரியைகளைச் செய்கிறீர்கள் என்பது கவலையில்லை; அது ஒருபோதும் சந்திக்காது, அல்லது எதையும் செய்யாது; ஏனென்றால் ஜீவனுள்ள தேவனுடைய சபை அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட்டு உறுதிப் படுத்தப் படுகிறது. அவர்கள் அந்தக் கல்லை நிராகரித்தார்கள். 99 குகையில் இருந்த எலியாவைப் போல, அவன் முதலில் ஒரு பெருங்காற்றும் பூமி அதிர்ச்சியும் கடந்து செல்வதைக் கேட்டான், பின்பு அவன் மிகுந்த மின்னலைக் கேட்டான், பின்பு ஒரு சண்டமாருதத்தைக் கேட்டான்; ஆனால் தேவன் அதில் எதிலுமே இருக்கவில்லை. 100 இன்று நாம் அதைத்தான் செய்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்; நம்மிடம் அக்கினி, இரத்தம், புகை மற்றும் சண்டமாருதங்கள் இருந்திருக்கின்றன. நாம் சண்டமாருதங்களை (பலத்த காற்றுகளை) அதிகமாகக் கேட்டிருக்கிறோம்; அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க நாம் மறுத்து விட்டோமோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன். 101 இந்த ஆசரிப்புக் கூடாரத்தில் அப்படி இருக்க வேண்டாம். இது அமைதியாக நிற்கட்டும், தேவனுக்காகக் காத்திருக்கட்டும், ஏனென்றால்: கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் (அது குழப்பமடைவது), நடந்தாலும் சோர்ந்து போகார்கள்; எனக்குப் போதியும் கர்த்தாவே, எனக்குப் போதியும் கர்த்தாவே, எப்படிக் காத்திருப்பதென்று. 102 நிச்சயமாக, அங்கே அவர்கள் அதைக் கொண்டிருந்தார்கள். நிராகரிக்கப்பட்ட கல் மூலைக்குத் தலைக்கல்லாக, பிரதான மூலைக் கல்லாக மாறியது. அங்கேதான் அது இருக்கிறது. அவர்கள் சரியாகச் சென்று, நிராகரிக்கப்பட்ட இந்தக் கல்லை எடுத்து அதை உள்ளே அழுத்திய போது, அது கச்சிதமாகப் பொருந்தியது, கட்டிடம் ஒன்றாக இணைக்கப் பட்டது. 103 பின்பு கட்டிடம் ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் அர்ப்பணிப்பு நாளுக்கு அழைப்பு விடுத்தான். அந்த ஆசரிப்புக் கூடாரம் இதைப் போலவே கட்டப்பட்டது: சபை, பிராகாரம், பலிபீடம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம். ஆனால் அவர்கள் வர வேண்டியிருந்த கொள்கைகளைப் பாருங்கள், அவர்கள் எதற்காக நிற்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள், அவர்கள் எப்படி இந்த பொதுவான ஐக்கிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள். 104 இந்த ஆசரிப்புக் கூடாரம் எப்பொழுதும் அந்தக் கொள்கைகளின்படியே நிற்கட்டும்; அது அப்போது மாதிரியாக இருந்தது, இப்போது அது நிஜமாக இருக்கிறது. அப்போது மரித்த மிருகங்களின் இரத்தத்தின் ஒழுங்கு கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்பட்டது; ஆனால் இப்போது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்படுகிறது. நாம் உள்ளே வரும்போது நாம் இரத்தத்தையும், தேவனுடைய வல்லமையின் சுகத்தையும் அங்கீகரிக்க வேண்டும். நாம் முழு சுவிசேஷத்தையும் அங்கீகரிக்க வேண்டும். நம்மைப் போலவே அதே கூறுகளின் வழியாக வந்த, ஐக்கியத்தை விரும்புகிற ஒவ்வொரு சகோதரனுடனும் அல்லது சகோதரியுடனும் நாம் ஐக்கியம் கொள்ள வேண்டும். அவருடைய ஸ்தாபனம் வழியில் நிற்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்; அப்போது கர்த்தருடைய வருகை வரைக்கும் இந்தச் சபை நிற்கும், ஏனென்றால் அது சீக்கிரம் வரப்போகிறது என்று நான் நம்புகிறேன். 105 ஆனால் பெட்டி உள்ளே கொண்டுவரப்பட்ட பிறகும், தீட்டுக்கழிக்கும் ஜலம் (பிரித்தெடுக்கும் தண்ணீர்) பிராகாரத்தில் வைக்கப்பட்ட பிறகும், சிவப்பான கிடாரியைக் கொன்ற இரத்தம் வாசலின் குறுக்கே பூசப்பட்ட பிறகும், எல்லாம் ஒழுங்காக இருந்தபோது, சாலொமோன் மக்களை ஒன்றாக அழைத்தான்; இன்று காலை உங்கள் போதகர் உங்களை அழைத்தது போல. ஓ, அது மெய்யாகவே அர்ப்பணிப்பு மற்றும் ஐக்கியத்தின் நேரமாக இருந்தது. 106 முடிவாக, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: அவர்கள் அவர்களை ஒன்றாக அழைத்தார்கள்; தேவன் இறுதியாகத் தங்களைச் சந்திக்கப்போகும் ஒரு இடத்தைப் பெற்றி ருக்கிறார் என்பதைக் காண மக்கள் உள்ளே வந்தபோது, அவருடைய சுவிசேஷத்தை உரிமையாக்கிக்கொள்வது தெளிவாக்கப்பட்டது, அணுகும் வழி தெளிவாக்கப்பட்டது, அனைத்தும் சரியாகச் செய்யப்பட்டது. 107 பாருங்கள், அவர்கள் வெவ்வேறு இசைக் கருவிகளை வாசிப்பவர்களின் குமாரர்களை அழைத்தார்கள்; அவர்கள் பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்திற்குச் சென்றார்கள், அவர்கள் வெண் வஸ்திரம் தரித்திருந்தார்கள், அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடினார்கள்; அது ஒரே குரல் போல ஒலிக்கும் வரை மக்கள் தேவனைத் துதித்தார்கள். அது பெந்தெகொஸ்தே இல்லையென்றால், என் வாழ்நாளில் நான் அதை ஒருபோதும் பார்த்ததில்லை, அது அதன் வல்லமையில், அதன்... [ஒலி நாடாவில் காலியிடம்] 108 ஆலயம் அர்ப்பணிக்கப்படத் தயாராக இருந்தது. அர்ப்பணிப்புக்காக இன்று காலை நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள், இஸ்ரவேலர் ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காக மட்டும் தயாராக இருக்கவில்லை; ஆனால் அவர்கள் உள்ளே வந்தபோது தங்களைத் தேவனுக்கு மீண்டும் அர்ப்பணித்துக் கொண்டார்கள். இன்றைய பெந்தெகொஸ்தே சபை... 109 இங்கிருக்கும் இந்தப் போதகர் தேவனுடைய மனிதர் என்று என் இருதயப்பூர்வமாக நான் நம்புகிறேன்; தேவன் நமக்கு வகுத்துள்ள கொள்கைகளுக்காக அவர் நிற்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆகவே, ஒரு சபையின் அர்ப்பணிப்பு என்பது வந்து, "ஆண்டவரே, இந்தக் கட்டிடத்தை நாங்கள் உமக்குக் கொடுக்கிறோம்" என்று சொல்வது மட்டுமல்ல; ஆனால் "ஆண்டவரே, எங்களை நாங்களே உமக்குப் பலியாகக் கொடுக்கிறோம்" என்று அர்த்தம் என்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். 110 ஒவ்வொரு ஈஸ்டர் காலையிலும் தேவன் விரும்புவது பலிபீடத்தின் மேல் இருக்கும் ஒரு லீலி மலர் அல்ல, பலிபீடத்தின் மேல் இருக்கும் பாவிதான். கட்டிடத்தின் தரம் மற்றும் அழகு அல்ல, அது நல்லதுதான், சாலொமோனின் ஆலயமும் அப்படியே இருந்தது; ஆனால் தேவனுடைய நிபந்தனை களின் கீழ் வருவது, தேவனுடைய சேவைக்குத் சுய பலியாக வருவதே ஆகும். 111 இஸ்ரவேலர் இறுதியாகத் தாங்கள் அனைவரும் வசிக்கக்கூடிய ஒரு இடத்தையும், இரத்தத்தின் ஐக்கியத்தின் கீழ் வந்து தேவனைச் சந்திக்கும் ஒரு இடத்தையும் உண்டாக்கிய போது, அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடத் தொடங்கினார்கள், அவர்கள் சுரமண்டலத்தை வாசிக்கத் தொடங்கினார்கள், ஒரே குரல் பாடுவது போல ஒலிக்கும் வரை அவர்கள் அவ்வளவு ஏகோபித்து தேவனைத் துதித்தார்கள். 112 பின்பு சாலொமோன் ஜெபிக்கவும், கர்த்தருக்கு அர்ப்பணம் செய்யவும் நின்றான். அவன் அதைச் செய்தபோது, நினைவில் கொள்ளுங்கள், பெட்டி ஏற்கனவே கேருபீன் களின் செட்டைகளுக்குக் கீழே கொண்டு வரப்பட்டு பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப் பட்டிருந்தது; ஆனால் மக்கள் அர்ப்பணித்த போது, சபையை அல்ல, கட்டிடத்தை அல்ல, ஆனால் மக்கள் ஒருமனப்பட்டபோது, ஒருமனப்பட்டு ஜெபித்தபோது, ஒருமனப்பட்டுப் பாடியபோது, எல்லாம் ஒருமனப்பட்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அக்கினி ஸ்தம்பத்தின் வடிவில் கட்டிடத்திற்குள் அசைவாடி அந்த இடத்தின்மேல் தங்கினார். ஆசாரியர்களால் இனி ஊழியம் செய்ய முடியாத அளவுக்கு அந்தக் கட்டிடத்தில் அவ்வளவு மகிமை இருந்தது. 113 தேவன் அது மீண்டும் இருக்க விடட்டும், இந்தச் சிறிய ஆசரிப்புக் கூடாரத்திற்கு அது மீண்டும் வரட்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, நாம் இரத்தத்தின் வழியாக, அல்லது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் கீழே நடந்து இங்கே வருகிறோம். இஸ்ரவேலர் அவர்களுடைய ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து மகிழ்ச்சிய டைந்தது போல, நீங்களும் இன்று காலை இந்தச் சிறிய ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். 114 அவர்கள் வந்த அதே ஒழுங்கின் கீழ் வாருங்கள், மகிழ்ச்சி உங்கள் இருதயத்திற்கு வரும். ஆவியினால் பிறந்த எந்த மனிதனையும் நீங்கள் ஒருபோதும் ஆக்கினைக்குட்படுத்த மாட்டீர்கள் என்பதையும், அவருடைய ஊழியர்கள் அனைவரோடும், அவருடைய மக்கள் அனைவரோடும் நீங்கள் ஐக்கியம் கொள்வீர்கள் என்பதையும் உங்கள் இருதயத்தில் தாங்கிக்கொள்ளுங்கள். இது ஒரு மதங்களுக்கிடையேயான (inter denominational) நிறுவனமாக நிற்கட்டும், வழிப்போக்கர்கள் வரக்கூடிய ஒரு இடமாக இது நிற்கட்டும்; இது சாலையோரத்தில் ஒரு வீடாக, ஒரு இடமாக இருக்கட்டும்; யாத்திரிகன், வழிப்போக்கன் இதன் வாசலுக்குள் நுழைகையில் இளைப்பாறுதலைக் கண்டடை யும் ஒரு இடமாக இது இருக்கட்டும்; இதன் போதகர் கர்த்தருடைய வருகையைக் காணும் வரை வாழ்வாராக; சபை பெருகி, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் செழித்தோங்குவீராக; தேவனுடைய ஆசீர்வாதங்கள் இதன்மேல் தங்குவதாக. அவருடைய கிருபையினால் என்னை ஒரு ஊழியராக மாற்றின அவர், தேவனுடைய ஒழுங்கின் கீழ் நிலைத்திருக்கும் வரைக்கும் வாக்குத்தத்தத்தில் நீடித்திருக்கும்படி இந்தச் சிறிய சபைக்கு இந்த ஆசீர்வாதத்தை நான் கூறுகிறேன். ஆனால் அது தேவனுடைய ஒழுங்கை விட்டு வெளியேறினால், அதற்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். 115 உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு வாசலின் நிலைக்கால்களிலும், அங்கிருக்கும் கதவின் நிலைக்கால்களிலும் இரத்தம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; அங்கே ஸ்தாபன தடைகள் இல்லை, வித்தியாசம் இல்லை, கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். விரும்புகிறவன் எவனும் வந்து ஐக்கியம் கொள்வதற்காக இது இருக்கட்டும். இந்தப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து முழு சுவிசேஷத் தையும் பிரசங்கிக்க ஒருபோதும் தவறாதீர்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் அற்புதங்களும் அடையாளங்களும் அதிசயங்களும் இந்த இடத்தில் எப்பொழுதும் இருப்பதாக. 116 உடைந்த ஒவ்வொரு இருதயத்தையும் ஆற்றும் அபின் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்ட பிரதான ஆசாரியர். சாரோனின் ரோஜா, ஆவியின் இனிமை, அபிஷேக தைலத்துடன் இவ்வளவு செழுமையாக இங்கே பிரசங்கிக்கப்பட்டு இங்கே வெளிப்படுத்தப் படுவதாக; நாட்டின் அனைத்துப் பகுதிகளி லிருந்தும் மக்கள் உள்ளே வந்து, "மெய்யாகவே தேவன் உங்களோடு இருக்கிறார்" என்று சொல்லும்படி ஆவதாக. 117 அடையாளங்களும் அதிசயங்களும் நம்முடைய சகோதரனின் பிரசங்கத்துடன் கூடச் செல்வதாக. அவர் வேறெங்காவது சென்றால், அல்லது மரித்தால், சாம் ஜோன்ஸ் மற்றும் அவர்கள் காலத்திலிருந்து பல ஆண்டுகளாக நடந்து வருவது போல, அவரைப் பின்தொடர்பவர் இந்தக் கட்டிடத்திற்குள் நடப்பாராக. இந்தப் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இங்கே பிரசங்கிக்கப்பட ஒருபோதும் தவறாதிருப்பதாக. இது ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாமலும், அல்லது எந்தவொரு ஸ்தாபனத்தின் மூலமாகவும் எல்லைக் கோடுகளை வரையாமலும் இருக்கட்டும்; "விரும்புகிறவன் எவனும் வந்து, கர்த்தருடைய ஊற்றுகளிலிருந்து பருகட்டும்" என்பதற்கு இது எப்போதும் திறந்திருக்கட்டும். 118 சாலொமோன் செய்தது போல, அர்ப்பணிப்பு ஜெபத்தை நாம் ஜெபிக்கும்போது, சபையார் எழுந்து நின்று தங்கள் கைகளை உயர்த்தி உங்கள் சொந்த வழியில் ஜெபியுங்கள்; இந்த ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும், தொழுதுகொள்ளும் இடத்திற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் இறுதியாகத் தம்முடைய நாமத்தை, இரத்தத்தின் கீழும், ஆவியின் ஐக்கியத்தின் கீழும் வைக்கக்கூடிய ஒரு இடத்தைக் கண்டார். 119 ஒவ்வொருவரும் இப்போது உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள், உங்கள் சொந்த வழியில் தேவனுடைய மகிமைக்காக இந்த ஆலயத்துடன் நம்மை நாமே அர்ப்பணிப்போம். 120 சர்வவல்லமையுள்ள தேவனே, மனிதர்களின் கரங்களின் வேலையை, இந்த ஆசரிப்புக் கூடாரத்தை உம்முடைய பிரசன்னத்திற்குள் கொண்டு வருகிறோம்; கண்ணீர், தியாகம் மற்றும் உழைப்பு இதன் பொருட்களை வாங்கியது; கவனமான கரங்கள் இதை வடிவமைத்து ஒரு இடமாக உருவாக்கின; தாவீதின் இருதயத்தில் இருந்த அதே பாரம் அவர்கள் இருதயங்களிலும் இருந்தது: "நம்மில் அநேகர் நல்ல வீடுகளில் வசிக்கும்போது, இந்தப் பழைய, இடிந்துபோன குடிசையில் நாங்கள் தொழுதுகொள்வது சரியல்ல." 121 ஓ கர்த்தராகிய தேவனே, அதே பரிசுத்த ஆவியும், தேவனுடைய அதே நிபந்தனைகளும் இப்போது இந்த ஆசரிப்புக் கூடாரத்தில் நிஜமாகப் பிரசங்கிக்கப்படுவதாக. பரிசுத்த ஆவியானவர் இன்று அசைவாடி, வாசற்படியின் வழியாக உள்ளே வந்து, ஒவ்வொருவர் மேலும் தங்குவாராக. ஜீவனுள்ள தேவனுடைய வல்லமை இந்த ஆசரிப்புக் கூடாரத்தில் இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக இது எப்போதும் நிற்பதாக. 122 கர்த்தராகிய தேவனே, நாங்கள் இதை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம், கைகளின் கிரியைகள், உழைப்பு, பாடுகள், கவலைகள் ஆகியவற்றை. மேலும், ஆண்டவரே, இது வீணாகப் போகாமல், இந்த கூடாரத்தின் பிரதிஷ்டையில் உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட செய்தியை மக்கள் உணர்ந்து கொள்வார்களாக. 123 ஆண்டவரே, உம்முடைய ஆவி இந்த இடத்திற்குள் வருவதாக. கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கிற ஒவ்வொரு ஆணோ அல்லது பெண்ணோ, அந்த வாசல் வழியாக நடக்கும்போது, அது இரத்தத்திற்குள் வருகிறது என்பதை அது உணர்ந்து கொள்வதாக. கிறிஸ்துவின் ஆசீர்வாதம், ஆவியின் இனிமை இங்கே காணப்படுவதாக, அதனால் நகரத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சுவிசேஷத்தைக் கேட்க ஆண்களும் பெண்களும் திரண்டு வருவார்களாக. இந்த சபை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் சுவையூட்டப்பட்டு உப்பிடப்படுவதாக, அவர்கள் பூமிக்கு உப்பு என்று அழைக்கப்படும் வரை. இதை அருளும், ஆண்டவரே. இன்று காலை எங்கள் ஜெபங்களைக் கேளும். 124 நாங்கள் இந்த கூடாரத்தை மட்டும் உமக்குக் கொடுக்கவில்லை, ஆனால் இந்த கூடாரத்திற்காகவும், அது எதற்காக நிற்கிறதோ அந்த லட்சியத்திற்காகவும் சேவையில் எங்களையே உமக்குக் கொடுக்கிறோம். 125 ஓ தேவனே, இன்று காலை எங்களை ஏற்றுக்கொள்ளும், நாங்கள் உம்முடைய பிள்ளைகள், பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாயிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிப்பதால், இன்று காலை எங்கள் கால்களில் நின்று, எங்கள் கைகளை உயர்த்தி, எங்கள் கண்களை ஏறெடுத்து நிற்கிறோம், ஆண்டவரே, எங்களுக்குச் செவி கொடுத்து, எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும், மேலும் உம்முடைய தயவை நாங்கள் நினைவு கூருதலையும், நாங்கள் அதை உமக்கு முன்பாக வைக்கும்போது எங்கள் கைகளின் கிரியை களையும் ஏற்றுக்கொள்ளும். தேவனுடைய வல்லமை எங்கள் பலியை எடுத்துக்கொண்டு, அதோடு எங்களையும் எடுத்துக்கொண்டு, கூடாரம் மற்றும் சபை ஆகிய இரண்டையும் தேவனுடைய ராஜ்யத்திற்கும், அவருடைய குமாரனின் வேலைக்கும் அர்ப்பணிப்பதாக. ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம், அதை நாங்கள் உமக்குக் கொடுக்கிறோம். ஆமென். 126 நீங்கள் அமரலாம். இந்த கூடாரம் இப்போது சர்வவல்லமையுள்ள தேவனுக்குச் சொந்தமானது, நீங்கள் சர்வவல்லமையுள்ள தேவனுக்குச் சொந்தமானவர்கள். எப்போதும் உங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் சபையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், அதை நேர்மையாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் அவ்வழியே பயணம் செய்யும் எவரும் உள்ளே வந்து உங்களோடு ஐக்கியம் கொள்ள விரும்புவார்கள். எவருக்கும் ஒரு கையை நீட்டி அவர்களுக்கு உதவி செய்யும்படி அத்தகைய ஒரு இனிமையான ஆவியை கொண்டிருங்கள். அவர்கள் சாக்கடையில் எவ்வளவு கீழே இருந்தாலும் பரவாயில்லை, அதற்காகத்தான் இது நிற்கிறது, தேவனுடைய கிருபையின் ஒரு புனித ஸ்தலம். இது உங்களுடைய... ~ 75 ~